1200 பேரை பலிவாங்கிய இயற்கை பேரழிவு! தப்பிப்பதற்கு கைக்குழந்தையுடன் ஓடிய தாயின் வீடியோ காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் காரணமாக அங்கிருக்கும் வீடுகள் தரைமட்டாகிய நிலையில், அப்போது பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் ஓடும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இந்தோனேஷியாவில் கடந்த வெள்ளிக் கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக தற்போது வரை 1200-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியதால், இடிபாடுகளுக்கிடையே ஏராளமான மக்கள் சிக்கியியுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு படையினர் தண்ணீர் மற்றும் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பவர்களை மீட்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

இந்நிலையில் இந்த இயற்கை பேரழிவின் காரணமாக அங்கிருக்கும் நிலப்பரப்பு முழுவதும் ஈரமாகியதால், கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

இதை அங்கிருக்கும் குடும்பத்தினர் வேடிக்கை பார்க்கின்றனர், அப்போது பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் இருக்கிறார். மற்றொரு நபர் இந்த காட்சியை வீடியோவாக எடுக்க, கட்டிடங்கள் அப்படியே இடிந்து விழுந்து தரைமட்டமாகுவதை பார்க்க முடிகிறது. இப்படி தொடர்ந்து இடிந்து வந்ததால், அந்த பெண் உட்பட உடன் இருந்த சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடுகின்றனர்.

இந்தக் காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் இதன் காரணமாக வீதிகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள் அங்கிருக்கும் கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை சூறையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers