வீட்டில் கொள்ளையடித்த பணத்தை கொள்ளையர்களிடம் சண்டை போட்டு தைரியமாக மீட்ட சிறுமி! வெளியான பரபரப்பு வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்சில் தந்தையிடமிருந்து துப்பாக்கி முனையில் பணத்தை திருடிச் சென்ற கும்பலிடம் எட்டு வயது மகள் தைரியமாக சண்டை போட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

பிலிப்பைன்சின் Cavite பகுதியைச் சேர்ந்தவர் Brielle Minia. 8 வயது சிறுமியான இவர் தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது DVD விற்பது போன்று அவரின் வீட்டிற்குள் சிலர் நுழைந்துள்ளனர். அதன் பின் அவர்கள் துப்பாக்கி முனையில் வீட்டில் இருந்த பணம் மற்றும் பொருட்களை திருடிக் கொண்டு வெளியில் வந்துள்ளனர்.

அந்த நேரத்தில் Brielle Minia-ன் தந்தை BJ Alba அவர்களிடம் சண்டை போட்டுள்ளார். வெளியில் விளையாடிக் கொண்டிருந்த Brielle Minia வீட்டில் ஏதோ நடப்பதை உணர்ந்து நடந்து வந்த போது, கொள்ளையரக்ளை பார்த்துள்ளார்.

அவர்களிடம் துப்பாக்கி இருந்த போதும், தைரியமாக அவர்களிடம் சண்டை போட்டு ஓடவைத்துள்ளார். இதில் அவர்கள் கொள்ளையடிக்கப்பட்ட பணங்களை அந்த தெருவில்விட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்த ஒருவன் வண்டியை எடுக்க முற்பட்ட போதும் தடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தால் சிறுமியின் முக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமி இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இது குறித்து சிறுமி கூறுகையில், எனக்கு பார்த்தவுடன் கோபம் வந்துவிட்டது. அது என் அப்பாவுடைய பணம், அந்த பணத்திற்கு எங்கள் குடும்பத்தினர் நீண்ட நாட்கள் உழைத்துள்ளனர். நல்ல வேலை ஒரு வழியாக பணத்தை காப்பாற்றிவிட்டோம் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் கொள்ளையர்கள் தப்பிவிட்டதால், பொலிசார் கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளதால், அதைக் கண்ட இணையவாசிகள் சிறுமியை பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்