1200 பேரை பலிவாங்கிய இயற்கை பேரழிவை பயன்படுத்தி செய்யப்பட்ட திடுக்கிடும் செயல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பெரும்பாலான சிறைகள் இடிந்த நிலையில் அங்கிருந்து 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

சுலேவேசி தீவில் டோங்கலா என்ற பகுதியை மையமாக கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு சுனாமியும் தாக்கியது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 1200-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

இந்நிலையில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் அங்கிருந்த சிறைச்சாலைகள் இடிந்து 1200 கைதிகள் தப்பியோடிவிட்டதாக அரசு கூறியது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பலு மற்றும் டோங்கலா ஆகிய பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகள் பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் உயிருக்கு பயந்து தப்பியோடியிருக்கலாம்.

விரைவில் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers