15 வயது இளைஞனை இரயில்வே தண்டவாளத்தில் இழுத்து தள்ளிய நபர்! வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பெல்ஜியமில் 15 வயது சிறுவன் இரயில்வே தண்டவாளத்தில் இழுத்து தள்ளிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெல்ஜியமின் Flanders பகுதியில் இருக்கும் Aarschot இரயில் நிலையத்திற்கு Leroy Abraham(15) என்ற இளைஞர் தன் சகோதரர் மற்றும் சகோதரியுடன் இரயிலுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் காத்திருந்துள்ளனர்.

அப்போது Jonas V என்ற 35 வயது நபர் Leroy-ஐ அங்கிருக்கும் இரயில்வே தண்டவாளத்தில் இழுத்து தள்ளுகிறார். இதனால் ஆத்திரமான Leroy அவரை உள்ளே இழுத்து தள்ள, இருவரும் தண்டவாளத்தில் சண்டை போட்டுள்ளனர்.

அப்போது Leroy-யின் சகோதரிகள் சண்டையை விளக்கிவிட்டு மேலே வந்துள்ளனர்.

இது குறித்து Leroy கூறுகையில், அந்த நிமிடே எனக்கு இதயம் நின்றுவிட்டது போல் உணர்ந்தேன். ஏனெனில் இரயில் வரும் நேரம், இறக்கப்போகிறேன் என்று தான் நினைத்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் Leroy கூறுகையில், அந்த நபர் மற்றும் உடன் இருந்த பெண் தங்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து Jonas V கைது செய்யப்பட்டுதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers