இந்தோனேசியாவை தாக்கியது அதிசய சுனாமி! குழப்பத்தில் விஞ்ஞானிகள்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் கடந்த 28ம் திகதி தாக்கிய சுனாமி மாபெரும் பேரழிவுகளை ஏற்படுத்தி சென்ற நிலையில் கருவிகளால் கண்டுபிடிக்க இயலாதது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 28ம் திகதி அடுத்தடுத்த நிலநடுக்கங்களுக்கு பின்னர் சுனாமி தாக்கியது, முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட சில மணிநேரங்களில் ராட்சத அலைகள் எழுந்தன.

இந்நிலையில் சுனாமி ஏற்படுவதற்கான எந்த அறிகுறிகளும் கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத சூழலில் விஞ்ஞானிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள கடல் தகவல் தேசிய மையத்தின் டைரக்டர் ஷெனாய் கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்டதை கருவிகளால் தெரிந்து கொண்டோம், ஆனால் சுனாமி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடல் ஆய்வியல் மையத்தின் தலைவர் பட்டாபி ராமராவ் கூறுகையில், இரண்டு காரணங்களால் கருவியில் பதிவாகாமல் இருக்கலாம்.

ஒன்று நிலநடுக்கம் ஏற்பட்டதும் கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டு அதன் மூலம் சுனாமி கீழ் இருந்து உருவாகி இருக்கலாம் அல்லது நிலநடுக்கம் ஏற்பட்டதும் சிறிய அளவில் சுனாமி உருவாகி பூகோள ரீதியாக அது பெரிதாக மாறி இருக்கலாம்.

எனவே தான் முன்கூட்டியே கருவிகளில் அளவீடு காட்டவில்லை. இது ஒரு அதிசயமான வி‌ஷயம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers