திருமணமான 24 மணி நேரத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை: மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கானா நாட்டில் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரின் மனைவி கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திசு ககுரு என்ற இளைஞருக்கும், ஜானதில் என்ற பெண்ணுக்கும் கடந்த 30-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்ள ககுருவும், ஜானதிலும் காரில் ஒன்றாக வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கார் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே புதுமாப்பிள்ளை ககுரு உயிரிழந்தார்.

இதையடுத்து படுகாயமடைந்த ஜானதி மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அருகில் வந்த காரை ககுரு முந்த நினைத்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துள்ளானது தெரியவந்துள்ளது.

மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்க வேண்டிய இளம் தம்பதியின் இந்த பரிதாபமான நிலை அவர்களின் நண்பர்களையும், குடும்பத்தாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்