ஆப்கானிஸ்தானில் தேர்தல் பிரசார பேரணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானில் தேர்தல் பிரசார பேரணி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரிலே குறித்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியான நங்கர்ஹார் ( Nangarhar) மாகாணத்துக்குட்பட்ட ஜலாலாபாத் நகரின் அருகே அப்துல் நாசிர் முஹம்மது ( Abdul Nasir Mohmmand) என்ற வேட்பாளர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது தற்கொலைப்படை பயங்கரவாதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர் என மாகாண ஆளுநர் செய்தித் தொடர்பாளரான Ataullah Khogyani தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers