நடுக்கடலில் மனிதனை கட்டிப்பிடிக்க முயன்ற திமிங்கலம்: வைரலாகும் சுவாரசிய காட்சி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் நடுக்கடலில் திமிங்கலம் ஒன்று நீர்மூழ்கி வீரருடன் விளையாடிய சுவாரசிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

மாஸ்கோவைச் சேர்ந்த மைக் கோரஸ்டலவ் ((Mike Korostelev)) என்ற நீர்மூழ்கி வீரர் ஹம்பக் வகை திமிங்கலங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

கிழக்கு சைபீரியக் கடல் பகுதிக்குச் சென்ற அவர், அங்கு ஜோடியாகச் சுற்றிக் கொண்டிருந்த ஹம்பக் திமிங்கலங்களைப் பார்த்தார்.

அப்போது அவற்றில் ஒன்று மைக்கை கட்டித் தழுவுவது போல் சைகை செய்துள்ளது. இதனையடுத்து தனது காலில் கட்டியிருந்த துடுப்பு மூலம் திமிங்கலத்தை மைக் வருடிக் கொடுத்தார்.

இந்த விளையாட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers