அழிவின் விளிம்பில் ஒரு ஆதிவாசிக் கூட்டம்: அரிய புகைப்படங்கள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

அமேஸான் மழைக்காடுகளில் வசிக்கும் அவா என்னும் பிரேஸிலின் பூர்வக்குடிகளின் அபூர்வ புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மொத்தம் 600 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட இந்த ஆதிவாசிகளில், 100 பேர் இதுவரை வெளி உலகைக் கண்டதேயில்லை.

பொருளாதார லாப நோக்கத்திற்காக மரங்களை வெட்டும் நிறுவனங்களால் தொடர்ந்து இந்த ஆதிவாசிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அத்துடன் தங்கத்தைத் தேடியும் போதைப்பொருள் கடத்துவதற்காகவும் வருபவர்களுக்கு தப்புவதற்காக இந்த ஆதிவாசிகள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

அடிமைப்படுத்தும் ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தாலும் தங்கள் வாழ்வாதாரத்தை திருடும் சிலராலும் இந்த ஆதிவாசிகள் அழிவின் எல்லைக்கே சென்று விட்டார்கள் எனலாம்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்த ஆதிவாசிகள் தங்கள் வீடாகிய வனத்துடன் முற்றிலும் இணைந்து இன்பமாக வாழ்கிறார்கள்.

பல ஆதிவாசிக் குடும்பங்கள் காட்டு விலங்குகளை தத்தெடுத்து வளர்ப்பதுடன், அவற்றிற்கு அவா ஆதிவாசிப் பெண்கள் குழந்தைகள் போல் பாலூட்டி வளர்க்கிறார்கள். அவை வளர்ந்த பிறகு அவற்றை காடுகளுக்கு செல்ல அனுமதிக்கிறார்கள் இந்த பெண்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers