திருமணமான சில மணி நேரத்தில் உயிரிழந்த கணவன்: கோமாவில் இருந்து எழுந்த மனைவியின் உருக்கமான பதிவு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கானாவில் திருமணமான அன்றே விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில், கோமாவில் இருந்த மனைவிக்கு நினைவு திரும்பியுள்ளது.

திசு ககுரு என்ற இளைஞருக்கும் ஜானதில் என்ற பெண்ணுக்கும் கடந்த 30-ஆம் திகதி திருமணம் நடந்தது.

இதையடுத்து அன்று மாலையே இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட இருந்தது.

இதில் கலந்துகொள்ள ககுருவும், ஜானதிலும் காரில் வந்து கொண்டிருந்த போது கார் வேகமாக மரத்தில் மோதியது. இதில் புதுமாப்பிள்ளை ககுரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து படுகாயமடைந்த அவர் மனைவி ஜானதில் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது கோமாவில் இருந்து வெளிவந்துள்ளார் ஜானதில். இதையடுத்து மறைந்த தனது கணவர் குறித்து உருக்கமான பதிவை பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், பூமியில் உள்ள மனிதர்களை வணங்க அல்லா அனுமதி கொடுத்தால் நான் உங்களை தான் முதலும், கடைசியுமாக வணங்குவேன்.

கடவுளுக்கு பயப்படும் உங்களை போன்ற நபர் கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers