பிறந்த குழந்தை: 6 மாதங்கள் கழித்து முகத்தை பார்த்த வீரரின் உணர்ச்சிகரமான வீடியோ

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் கப்பல் படை துறையில் பணியாற்றிய வீரர் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை 6 மாதங்கள் கழித்து முதல் முறையாக பார்க்கும்போது அவர் காட்டிய உணர்ச்சி தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

குறித்த வீரருக்கு யூன் 13 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் பணியாற்றி கப்பலில் 6 மாதங்களுக்கு பிறகே வீட்டுக்கு செல்ல முடியும் என்ற காரணத்தால் இவரால் தனது குழந்தையை பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், இவர் வீட்டுக்கு வருவது தெரிந்தவுடன் மனைவி பிரான்சிஸ் தனது குழந்தையை தூக்கிகொண்டு இவரை பார்க்க துறைமுகத்துக்கே சென்றுவிட்டார்.

தனது கணவர் வந்தவுடன் ஓடிச்சென்று கட்டியணைத்து பிறந்த குழந்தையை கொடுத்துள்ளார் மனைவி. தனக்கு பிறந்த குழந்தையை முதல் முறையாக பார்த்து முத்தமிட்டு சந்தோஷத்தில் தந்தை காட்டிய உணர்ச்சிகரமான வீடியோ பார்ப்பதற்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்