இளம்பெண்ணை கவர்வது எப்படி? வைரலாகும் குகை மனிதனின் காதல் பதிவு!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

உலகளவில் மிகவும் பிரபலமான தாய்லாந்து குகை மனிதன், சமீபத்தில் ரஷ்ய பெண்ணை கவர்ந்தது பற்றி வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் மிகவும் பிரபலமானவர் தாய்லாந்தை சேர்ந்த Jatuphum Losiri (48). இவரை பொதுமக்கள் பலரும் குகை மனிதன் என செல்லமாக அழைப்பார்கள்.

இவர் தன்னுடைய வாழ்நாளில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை முகப்புத்தகத்தின் வாயிலாக பதிவிட்டு வருபவர். அவரது பதிவுகளை உற்று கவனிப்பதற்காகவே ஏராளமானோர் அவரை பின் தொடர்க்கின்றனர்.

இந்த நிலையில் Losiri ரஷ்ய பெண்ணுடன் புகைப்படம் ஒன்றினை எடுத்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் எப்படி அந்த பெண்ணை கவர்ந்தேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள குறிப்பில், இன்று நான் என்னுடைய மோட்டார் சைக்கிளில் குகைக்கு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது எதிர் திசையில் ஒரு பெண்ணை கண்டேன். மென்மையாக, அழகாக இருந்தாள். நான் அவளிடம் சென்று, "நான் என்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது நீ என்னுடைய வழியில் குறுக்கிட்டுவிட்டாய். உன்னுடைய அழகு என்னை திரும்ப வைத்துவிட்டது".

"நான் உன்னிடம் சிறிது நேரம் பேச வேண்டும். உன்னை போலவே உன்னுடைய மனதும் அழகாக இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்" என கூறினேன்.

ரஷ்யாவை சேர்ந்த அந்த பெண் பின்னர் என்னுடைய குகைக்கு வந்தார். அவருடன் ஒரு புகைப்படம் மட்டும் தான் எடுத்துக்கொண்டேன் முத்தம் கூட இடவில்லை என பதிவிட்டிருந்தார். இளம்பெண்ணை கவர்ந்த அந்த விதத்தை நெட்டிசன்கள் பலரும் வியந்து பாராட்டினாலும், ஒரு சிலர் இது பழைய முறை என கூறியிருந்தனர். இந்த பதிவானது 9 ஆயிரம் பேரால் பகிரப்பட்டதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் கமெண்ட் செய்யப்பட்டிருந்தது.

அதன் பின்னர் சில நாட்கள் கழித்து Losiri, தன்னுடைய முகநூல் பக்கத்தில் பெண் ஒருவர், தன்னுடைய படுக்கையில் நிர்வாணமாக இருப்பதை போன்ற புகைப்படத்தினை பதிவிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரசரப்பட்டு உன்னை புகழ்ந்து விட்டோம். நீ காதல் கதைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு என நினைத்திருந்தோம். ஆனால் இப்படி செய்திவிட்டாய் என பதிவிட்டுருந்தனர்.

இதனை பார்த்த Losiri, இந்த பக்கத்தை பின்பற்ற யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. என்னுடைய கனவு மற்றும் வாழ்க்கைமுறையைப் பகிர்ந்துகொள்பவர்கள் மட்டுமே இருந்தால் போதும் என பதிவிட்டிருந்தார். மேலும் அவர், தனது படுக்கையில் நிர்வாணமாக எடுத்த புகைப்படம், ரஷ்ய சுற்றுலா பயணி அல்ல. அது மற்றொரு காதலி என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்