தாயின் கையால் பலர் முன்னிலையில் மகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை! கட்டியணைத்து கதறி அழுத பரிதாபம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மகள் திருடியதால் பொதுமக்கள் முன்னிலையில் அம்மாவே அவரை அடிக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டதால், அவர் அடித்தவுடன் கட்டிப்பிடித்து அழுத சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

மத்திய அமெரிக்காவின் Guatemala-வில் உள்ள San Antonio Ilotenango கிராமத்தைச் சேர்ந்தவர் Tomasa Tzoc Tipaz(35). இவர் அங்கிருக்கும் கடை ஒன்றில் துணியை திருடியுள்ளார்.

இந்த தகவல் அங்கிருக்கும் உள்ளூர் மேயருக்கு தெரியவர, உடனடியாக பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அங்கிருக்கும் கால்பந்து மைதானத்தில் பொதுமக்கள் பலரை கூட வைத்துள்ளனர்.

அதன் அந்த பெண்ணிற்கு 15 அடிகள் கொடுக்க வேண்டும் என்று தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஐந்து அடியை அவரது அம்மா தான் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது அம்மா மகளின் முதுகில் ஐந்து அடி அடிக்கிறார். அதன் பின் அந்த பகுதியின் மேயர் Juan Zapet முதுகில் ஐந்து அடிகளையும், அதன் பின் காலில் ஐந்து அடிகளையும் பயங்கரமாக அடிக்கிறார்.

இதில் அந்த பெண் வலி தாங்கமுடியாமல் அழுகிறார். அதன் பின் அவரது அம்மாவை, மேயர் அழைத்து மகளிடம் பேசும் படி கூற, உடனடியாக இருவரும் கட்டி அழுதுள்ளனர்.

இந்த காட்சியை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அங்கிருக்கும் மற்றொரு தலைவர் Jose Ajpop கூறுகையில், இப்படி ஒரு தண்டனை கொடுத்தால் தான் மற்றவர்கள் திருடுவதற்கு பயப்படுவார்கள், இது ஒரு சிறந்த உதாரணம், இந்த தண்டனை கொடுக்கப்படும் போது குழந்தைகள் இருக்கமாட்டார்கள், அவர்களை இங்கு அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்