நகைக்கடைக்குள் நுழைந்து வைரமோதிரத்தை அப்படியே முழுங்கிய திருடன்! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

துருக்கியில் பொலிசிடம் இருந்து தப்புவதற்காக திருடன் பல லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட நகையை அப்படியே முழுங்கிய சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துருக்கியின் Mugla மாகாணத்தின் Marmaris மாவட்டத்தில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு Ian Campbell என்ற 54 வயது நபர் சென்றுள்ளார். அப்போது அவர் அங்கிருக்கும் வைர மோதிரம் ஒன்றை திருடிச் செல்ல முயன்றுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த கடை ஊழியர் ஒருவர் கடையின் முன் பக்க கதவை அடைத்துள்ளார். அதன் பின் அவரிடம் கேட்ட போது இல்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த கடைக்கு பொலிசார் விரைந்ததால், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இருப்பினும் பொலிசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் எக்ஸ் ரே எடுத்து பார்த்த போது, அவரின் வயிற்றில் சுமார் 2.5 கேரட் மதிப்பு கொண்ட வைர மோதிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் மதிப்பு £30,756(இலங்கை மதிப்பு 68,71,520 லட்சம் ரூபாய்) ஆகும். அறுவை சிகிச்சை செய்த எடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மோதிரம் எடுக்கப்பட்டதா? இல்லையா? அந்த நபர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து தெரியவில்லை.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers