திருமண பரிசுகளை கூட பிரிக்கவில்லை! தேனிலவில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை... விதவையான புதுப்பெண்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் திருமணமான தம்பதி தேனிலவுக்கு சென்ற நிலையில் அங்கு மலையிலிருந்து கீழே விழுந்து கணவர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Potomac கவுண்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் கரமர். இவருக்கும் ஜெபனி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் 7ம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு வந்த பரிசு பொருட்களை கூட பிரித்து பார்க்காத புதுதம்பதி 9 நாட்களில் Hawaii மாகாணத்துக்கு தேனிலவுக்கு சென்றனர்.

அங்கே ஒரு வாரம் ஸ்டீபனும், ஜெபனியும் ஜாலியாக பல இடங்களை சுற்றி பார்த்தார்கள்.

இதையடுத்து மலையேற ஆசைப்பட்ட ஸ்டீபன் மனைவியை தனியாக விட்டுவிட்டு சென்றுள்ளார்.

ஜெபனிக்கு மலை ஏற தெரியாது என்பதால் அவர் உடன் செல்லவில்லை. அன்று இரவு நேரம் வந்த போதும் ஸ்டீபன் ஹொட்டல் அறைக்கு திரும்பவில்லை.

இதனால் பயந்து போன ஜெபனி பொலிசுக்கு தகவல் கொடுத்தார். இரண்டு நாட்கள் மலைப்பகுதியில் ஸ்டீபனை பொலிசார் தேடிய நிலையில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

மலையில் இருந்து விழுந்து ஸ்டீபன் இறந்ததாக கூறப்படும் வேளையில் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே சரியான காரணம் தெரியவரும்.

கணவனை இழந்து விதவையான புதுப்பெண் ஜெபனி கண்ணீரில் மிதக்கும் நிலையில் இது குறித்து தற்போது தான் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ஸ்டீபன் ராணுவத்தில் இரண்டாண்டுகள் பணியாற்றியதாலும், அவருக்கு மலை ஏறுவதில் ஏற்கனவே அனுபவம் இருப்பதாலும் அவர் பாதுகாப்பாக மலை ஏறுவார் என நினைத்தேன்.

என் அன்பான கணவரை இழந்தது வேதனை தருகிறது. இந்த தேனிலவு என் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers