தலைநகரின் 200வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட குவிந்த மணப்பெண்கள் கூட்டம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

செச்சினியா குடியரசின் தலைநகர் பகுதியில் நடைபெற்ற 200-வது ஆண்டு நிறைவு விழாவில் 200 மணப்பெண்கள் தங்களுடைய வருங்கால கணவரை திருமணம் செய்துகொள்ளும் புகைப்படங்கள் காண்போர் கண்களை கவரும் விதமாக அமைந்துள்ளது.

செச்சினியா குடியரசின் தலைநகரான Grozny-ன் 200வது ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த 1818-ம் ஆண்டு Grozny தலைநகராக அறிவிக்கப்பட்டிருந்தது.

2010-ம் ஆண்டு அறிக்கையின்படி செச்சினியா குடியரசு நாட்டில் 1.268.989 மக்கள் தொகை இருப்பதாக அறிக்கை வெளியானது. அதில் 95 சதவிகித மக்கள், அதாவது 270,000 மக்கள் முஸ்லிம்கள் என கூறப்பட்டது.

இந்த நிலையில் 200வது ஆண்டு நிறைவு விழாவானது Tsvetochny பார்க்கில் நடைபெற்றது. இதில் ரஷ்ய வட கொக்கியன் ஃபெடரல் மாவட்டத்திற்கான ஜனாதிபதி தூதர், அலெக்ஸாண்டர் மார்கோவ்னிகோவ் மற்றும் செச்சினியாவின் தலைவர் ரம்சான் கட்ரோவோ சிறப்புரை ஆற்றினார்.

இதில் கலந்து கொண்ட 200 மணப்பெண்கள் தங்களுடைய வருங்கால கணவரை திருமணம் செய்துகொண்டனர். இதில் ஆண்கள் சிலர் கையில் துப்பாக்கி ஏந்தியும், பொதுமக்கள் சிலர் நடனமாடியும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers