சிறுமிகளை 900 முறை துஸ்பிரயோகம் செய்த தந்தை: வரலாற்றிலேயே மோசமான குற்றவாளி என அறிவிப்பு

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் தன்னுடைய பாதுகாப்பில் இருந்த 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளை 900க்கும் அதிகமான முறை துஸ்பிரயோகம் செய்த கொடூரனை வரலாற்றிலேயே மோசமான ஒரு குற்றவாளி என நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ரஷ்யாவை சேர்ந்த Viktor Lishavsky (37) - Olga தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மேலும் இந்த தம்பதியினர் ஒன்பதுக்கு அதிகமான சிறுவர்களை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இவர்களுக்கு மாநில அரசின் சார்பில் மாதம் தோறும் £ 265 பவுண்டுகள் நிதியாக வழங்கப்படுகிறது. காலணி கடை ஒன்றினை நடத்தி வந்த Viktor, தான் வளர்த்த 12 முதல் 17 வயது சிறுவர்களை ஐந்து ஆண்டுகளாக துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் குறித்து சிறுமி Olga-விடம் கூறியுள்ளார். இதனையடுத்து Olga உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குற்றவாளி Viktor-ஐ கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து கூறிய Olga, ஐந்து ஆண்டுகளாக எனக்கு தெரியாமலே இந்த சம்பவம் நடந்து வந்துள்ளது. இதுகுறித்து எந்த சிறுமியும் என்னிடம் கூறவில்லை. ஏனெனில் அனைவருமே அவரை தங்களுடைய தந்தையாகவே கருதி வந்தனர் என தெரிவித்தார்.

இந்த நிலையில் குற்றவாளி Viktor-ஐ பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்பொழுது குற்றவாளி, சிறுமிகளை கொடுமைப்படுத்தி, தன்னுடைய பாலியல் அடிமைகளாக 900கும் மேற்பட்ட முறை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.

ரஷ்ய நாட்டின் வரலாற்றிலேயே Viktor தான் மோசமான ஒரு குற்றவாளி என தெரிவித்த நீதிபதி, அவனுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்