ஜார்ஜியாவில் காணாமல் போன செல்லப்பிராணி 3 வருடங்களுக்கு பின் கண்டுபிடித்துள்ள உரிமையாளரை பாசத்துடன் ஓடிவந்து கட்டியணைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஜார்ஜிவை சேர்ந்த Giorgi Bereziani, 62 என்ற நபர் தன்னுடைய வீட்டில் செல்லப்பிராணியாக ஜார்ச் என்ற நாயை வளர்த்து வந்தார்.
இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக தன்னுடய வளர்ப்பு நாயை தொலைத்து விட்டு பல பகுதிகளிலும் அதனை தேடி அலைந்துள்ளார். ஆனால் எந்த பகுதியிலும் கண்டறிய முடியாததால், சமூக வலைத்தளங்கள் மற்றும் சில விளம்பரங்களில் ஜார்ஜின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இத்தனை முயற்சிக்கு பின்னரும் ஜார்ஜ் கிடைக்காததை நினைத்து கவலையடைந்துள்ளார். அந்த சமயம் தான் அவருடைய வீட்டின் உதவியாளர், ஜார்ஜை போல ஒரு நாய் தெருவில் படுத்து கிடப்பதாக போன் செய்துள்ளார்.
இதனையடுத்து குடும்பத்துடன் அங்கு சென்ற Giorgi, ஜார்ஜ் என பெயர் சொல்லி அழைத்ததும், வேகமாக ஓடி வந்து உரிமையாளரை அனைத்து கொள்கிறது. இந்த வீடியோ காட்சியானது காண்பவரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அளவிற்கு ஒரு பாசத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த சம்பவம் குறித்து Giorgi கூறுகையில், ஜார்ஜின் காதுப்பகுதியில் மஞ்சள் நிறத்திலான அட்டை இருந்தது. அப்படியென்றால் விலங்கு கட்டுப்பாட்டு தொழிலாளர்கள் அதனை பிடித்துக்கொண்டு போயுள்ளனர். அதனால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்பதை தெரிந்துகொண்ட பின்னரே அதனை வெளியில் விட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.