கூகுள் மேப்பில் வழி தேடியவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
112Shares
112Shares
ibctamil.com

கூகுள் மேப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சிறந்த வழி எது என்று தேடிய ஒருவரின் கண்ணில் அவருக்கு அறிமுகமான ஒரு நபர் சிக்கினார்.

பெருவின் தலைநகரிலுள்ள ஒரு புகழ் பெற்ற பாலத்திற்கு செல்வதற்கு சிறந்த வழி எது என்று ஒரு நபர் Google Street Viewவில் தேடும்போது, வெள்ளை டாப்பும் நீல நிற ஜீன்ஸும் அணிந்த ஒரு பெண்ணின் மடியில் ஒரு ஆண் படுத்திருக்கும் காட்சி அவர் கண்ணில் பட்டது.

அந்த பெண்ணின் உடை தனக்கு நன்கு அறிமுகமானதாக தெரியவே கவனமாக பார்த்த அவர் அதிர்ந்து போனார். அந்தப் பெண் அவரது மனைவி.

அந்த காட்சிகளை படம் எடுத்து வைத்துக் கொண்டார் அவர்.

வீட்டிற்கு வந்து அந்த புகைப்படங்களைக் காட்டி தனது மனைவியிடம் சண்டையிட்டபோது அவள் தனக்கு இன்னொரு நபருடன் தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டாள் அவள்.

பின்னர் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்