20 பெண்களை கொலை செய்து இதயங்களை நாய்க்கு உணவாக போட்டது ஏன்? கொலைகாரனின் திடுக்கிடும் காரணம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் 20 பெண்களை கொடூரமாக கொலை செய்த நபர், அவர்களின் இதயங்களை தன் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு போட்டுள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மெக்சிகோவின் சீரியல் கில்லரான Juan Carlos மற்றும் அவரது மனைவி Patricia ஆகியோர் Ecatepec பகுதியில் கடந்த வாரம் குழந்தைகள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் Pram-ஐ கொண்டு சென்ற போது, பொலிசார் அவர்களிடம் சாதரணமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது Pram உள்ளே பார்த்த போது, மனித உடல்களின் பாகங்கள் இருந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது Juan Carlos 20 பெண்களை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கு அவரது மனைவியும் உடந்தை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இவரது மனைவி தங்கள் வீட்டில் விலை குறைந்த ஆடைகள் இருப்பதாக கூறி பெண்களை அழைத்து வருவாராம்.

அதன் பின் இவரின் கணவர் அவர்களை கொலை செய்து, பெண்களின் இதயங்களை நாய்களுக்கு போட்டுள்ளான். அதன் பின் அவர்களின் உடல் பாகங்களை ஒரு பையிலும் மற்றும் எலும்புகளை நிலத்திலும் புதைத்து வைத்துள்ளான்.

இது எல்லாம் ஏன் செய்கிறாய் என்று கேட்ட போது, அவன் மூன்று காரணங்கள் சொன்னதாக கூறப்படுகிறது. இவர்கள்(பெண்கள்) என்னை சில நேரம் தூங்கவிடமாட்டார்கள், மற்றொன்று இவர்க்ள் மீது வெறுப்பு இறுதியாக அவர்கள் எனக்கொரு தேவை என்று கூறியுள்ளான்.

என்னை இதற்கு மேல் விட்டாலும், நான் மீண்டும் பெண்களை கொலை செய்வேன், அதனால் என்னை விட்டுவிடாதீர்கள் என்று கூறியுள்ளான்.

இதனால் மனநிலை மருத்துவர்கள் அவரை சோதித்து வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் அவர் மனநிலை சரியில்லாதவர் போல் தான் உள்ளார். அவரது மனைவி பிறக்கும் போதே மனநிலை சரியில்லாமல் தான் பிறந்துள்ளார். பின்னர் எப்படி இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்கள் என்பது புரியவில்லை.

இருவருமே மனநிலை சரியில்லாதவர்களாக இருந்ததால், நல்லது, கெட்டது இவர்களுக்கு தெரியவில்லை என்று பொலிசார் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த நபர் பெண்களின் சில எலும்புகளை மந்திரவாதிகளுக்கு விற்றுள்ளதாகவும், 10 வயதில் இவனை பெண் ஒருவர் தொடர்ந்து டார்ச்சர் செய்ததான் காரணமாகவே இப்படி செய்துள்ளான் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி இவர்கள் இருவரும் இனி வெளியில் இருந்தால், மக்களுக்கு தான் பாதிப்பு என்று வழக்கு முடியும் வரை சிறையில் அடைக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers