திருமணத்துக்கு மாப்பிள்ளையே கிடைக்கல: இளம் பெண் செய்த அதிரடி செயலால் அதிர்ந்த பெற்றோர்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

உகண்டாவில் இளம் பெண்ணொருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

லுலி ஜெமிமா என்ற இளம்பெண்ணை அவரின் பெற்றோர் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

முதலில் திருமணத்தில் விருப்பமில்லாத ஜெமிமா தன்னை தானே திருமணம் செய்து கொண்டு பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்த திருமணத்தில் ஜெமிமாவின் பெற்றோர் கலந்து கொள்ளவில்லை.

திருமண நிகழ்வில் உரையாற்றிய ஜெமிமா, திருமணம் செய்து கொள்ள மாப்பிள்ளை கிடைக்காததால் இந்த முடிவை எடுத்தேன் என கூறினார்.

தன்னை தானே திருமணம் செய்ய ஜெமிமாவுக்கு வெறும் $2.62 மட்டுமே செலவானது. இந்த செலவும் அவரின் பயணத்துக்கு தான்.

ஏனெனில் ஜெமிமாவின் திருமண உடையை அவரின் தோழி வாங்கி கொடுத்தார்.

அதே போல அவரின் சகோதரர் கேக் வாங்கிய நிலையில், திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் அவர்களுக்கு ஆன செலவை அவர்களே ஏற்று கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers