உலகின் மிக நீண்ட தூர விமான பயணம் தொடங்கியது: எவ்வளவு மணிநேர பயணம் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
761Shares
761Shares
ibctamil.com

உலகின் மிக நீண்ட தூரப் பயண அனுபவத்தைத் தரும் 'நான் ஸ்டாப் சிங்கப்பூர் நியூயார்க் விமானம்' ஏற்கெனவே தொடர்ந்து இயங்கி வந்தது.

ஆனால் இதற்கு அதிக விமானக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்ததை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இப்போக்குவரத்தை நிறுத்திக்கொண்டது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு விமானப் பயணம் மீண்டும் தற்போது தொடங்கியுள்ளது. 19 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை இவ்விமானம் கடந்துசெல்கிறது

மிக நீண்ட தூர பயண அனுபவத்தைத் தரும் விமானம் சிங்கப்பூரிலிருந்து இன்று புறப்படுகிறது.

19 மணிநேரத்தில் இவ்விமானம் நியூயார்க்கை சென்றடையும்.

இதற்கென்று தொடங்கப்பட்டுள்ள புத்தம் புதிய இந்த ஏர்பஸ்ஸில் 161 பயணிகள் செல்லலாம். 67 பிஸினஸ் வகுப்பு, 94 பிரீமியம் எகனாமிக் வகுப்புப் பயணிகள் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்