இரு தலைகொண்ட விநோத பாம்பு: அதிர்ந்து போன வர்ஜீனிய பெண்மணி

Report Print Givitharan Givitharan in ஏனைய நாடுகள்
79Shares
79Shares
ibctamil.com

வர்ஜீனியாவில் பெண்மணியொருவர் தனது பூந்தோட்டத்தில் இரு தலைகொண்ட விசித்திர பாம்பொன்றைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளார்.

இந்த நச்சுத் தன்மையான விரியன் பாம்பு (Agkistrodon contortrix) கடந்த மாதம் கண்டறியப்பட்டிருந்தது.

இதுபோன்ற இருதலைகள் கொண்ட பாம்புகள் அவ்வப்போது தோன்றுவதுண்டு.

இவை ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் எவ்வாறு உருவாகிறார்களோ, அதேபோன்ற செயற்பாட்டின் மூலமாகவே உருவாகின்றன.

அதாவது நுகம் இரண்டாகப் பிளவுறுவதன் மூலம் இவை உருவாகின்றன.

ஆனாலும் இவற்றின் இருக்கைகளை அவ்வளவு சாதாரணமாக அறியமுடியாது.

காரணம் இவை விரைவிலேயே இறந்துவிடுகின்றன.

தற்போது கண்டறியப்பட்ட செப்புத்தலை பாம்பானது 15 சென்ரிமீட்டர் நீளமானது.

இதன் வயது வெறும் இரு வாரங்களே இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்