வெளிநாட்டில் பரிதாபமாக இறந்த தமிழக இளைஞர்: 10 நாட்கள் ஆகியும் வராததால் கண்ணீர்விடும் மனைவி, குழந்தைகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் சவுதி அரேபியாவில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் இறந்து 10 நாட்கள் ஆகியும், இன்னும் சொந்த ஊருக்கு வராததால், மனைவி மற்றும் குழந்தைகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

சவுதி அரேபியாவில் தமிழகத்தின் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் சித்தார்த்தன் என்பவர் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2-ஆம் திகதி அங்கு ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் ஜெயபிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.

இறந்து 10 நாட்கள் ஆகிய நிலையிலும், இன்னும் அவரது உடல் சொந்த ஊருக்கு வரவில்லை.

இது குறித்து ஜெயபிரகாஷ் சித்தார்த்தனின் உறவினர் மனோஜ் என்பவர் கூறுகையில், அவர் என்னுடைய மாமா தான் எங்க அக்காவும் அவரும் காதலித்து திருமணம் செயது கொண்டார்கள்.

மாமா திருமணத்திற்கு முன்பே சவுதியில் வேலை செய்து கொண்டிருந்ததால், எங்க அக்காவும் அவர் கூடவே சவுதிக்குப் சென்றுவிட்டார். கடந்த எட்டு வருடமா ஒரு பையன், ஒரு பொண்ணுன்னு என சந்தோஷமா இருந்தார்கள்.

இதைத் தொடர்ந்து தற்போது குழந்தைகளுக்கு விடுமுறை விட்டதால், அக்காவும், குழந்தைகளும் இங்கே வந்துவிட்டார்கள். அவருக்கு லீவு கிடைக்காத காரணத்தினால் வரமுடியவில்லை.

தீபாவளிக்கு வருவதாக இருந்தார், ஆனால் இப்படி ஆகிவிட்டது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாமா உடலை சீக்கிரம் இந்தியா கொண்டு வரணும்னு மனு கொடுத்தோம். அடுத்தநாள்

கேட்ட போது, டெல்லிக்கு மனுவை அனுப்பி வைத்துவிட்டோம், இனி அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று கூறினர்.

அதன் பின் இது குறித்து மீண்டும் கேட்ட போது, பொலிசார் விசாரணை நடத்திகிட்டு இருக்காங்க, அது எல்லாம் முடிந்தால் தான் இந்தியா கொண்டு வர முடியும் என்று கூறுகின்றனர்.

இன்னும் சில நாட்கள் ஆகும் என்று வேறு சொல்கிறார்கள், எங்க மாமா இறந்து 10 நாட்கள் ஆகுது. அக்காவும் குழந்தைகளும் அழுதுட்டே இருக்காங்க.

அவர் உடலை எவ்வளவு சீக்கிரம் இந்தியா கொண்டு வர முடியுமோ, கொண்டு வரணும். காலதாமதம் பண்ணாம சீக்கிரமே தமிழக அரசு இதை செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers