இது கடவுளின் சாபம்: உலகின் மிக வயதான பெண்மணி பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் குடியிருந்துவரும் உலகின் மிக வயதான பெண்மணி தாம் கடந்து வந்த பாதைகள் குறித்து முதன் முறையாக பத்திரிகைகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நீண்ட ஆயுள் என்பது கடவுளின் வரம் அல்ல அது அவர் அளித்துள்ள சாபம் எனவும் 129 வயதான Koku Istambulova தெரிவித்துள்ளார்.

அவர் வைத்திருக்கும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் 1889 ஆம் ஆண்டு ஜூன் முதல் திகதியில் பிறந்ததாக கூறப்படுகிறது.

செச்சினியா போர் நடைபெற்ற காலகட்டத்தில் தம்மிடம் இருந்த ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரையானதாக கூறும் அவர், தனது 54 ஆம் வயதின் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கையால் கூட்டம் கூட்டமாக செச்சினியா மக்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

1944 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அது, கடும் பனிப்பொழிவால் மக்கள் குடியிருப்புக்குள் முடங்க முடியாமல் ரஷ்ய ராணுவத்தால் துரத்தப்பட்டனர்.

செச்சினியா மக்களை ரயில்களில் திணித்து அனுப்பி வைக்கப்பட்டனர். எங்கும் அழுகுரலும், மரண ஓலவுமாக இருந்தது.

ரயில் நிலையங்கள் குப்பைகளால் நிரம்பி வழிந்தது. கழிவறை செல்லவே முடியாத நிலை நீடித்ததால் இளம்பெண்கள் அவர்களின் சிறுநீர்ப்பை கிழிந்து அவதிக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி ரயிலில் நெரிசல் அதிகமாக இருந்ததால் பலர் மரணமடைந்ததாகவும், அவர்களை போகும் வழியிலேயே விட்டுவிட்டு சென்றதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

அந்த சடலங்களை நாயும் நரியும் உணவாக்கியதை தமது கண்ணால் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்டாலின் மரணத்திற்கு பின்னர், நீண்ட 13 ஆண்டு காலம் கடந்து செச்சினியா மக்கள் சொந்த பகுதிக்கு திரும்பியதாகவும்,

ஆனால் ரஷ்ய ராணுவத்தினரிடம் தங்கள் குடியிருப்புகள் சிக்கியிருந்ததை அறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தமது மகளின் ஒரு பேரப்பிள்ளையான மெதினா(15) உடன் குடியிருப்பதாக தெரிவித்துள்ள அவர், நீண்ட ஆயுள் என்பது தன்னை பொறுத்தமட்டில் கடவுளின் வரமல்ல சாபமே என்றார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்