தீராத தலைவலியால் மருத்துவமனைக்கு சென்ற முதியவர்! ஸ்கேன் எடுத்து பார்த்த போது மருத்துவர்கள் அதிர்ச்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் தலைவலிக்காக வந்தவரை சோதித்து பார்த்த போது அவரது தலையில் ஆணி இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சீனாவின் ஹூபி மாகாணத்தை சேர்ந்தவர் ஹூ(62).

இவர் சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளியான இவர் கடந்த இரண்டு வாரங்களாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் இவர் சீனாவின் செங்கயாங் மக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கு அவரை சோதித்த மருத்துவர் CT ஸ்கேன் எடுத்தால் தான் என்ன காரணம் என்பது தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

இந்த பரிசோதனையின் போது ஹூ மண்டையோட்டில் சுமார் 48 மி.மீற்றர் நீளமுள்ள இரும்பு ஆணி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த இரும்பு ஆணியின் காரணமாகவே ஹூ-க்கு தீராத தலைவலி ஏற்பட்டதாகவும், மற்றபடி உடல்நலத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஹுவுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ஆணியை வெளியில் எடுத்துள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஹூ-க்கு தனது தலையினுல் ஆணி எப்படி சென்றது என்பதே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்