போர்த்துக்கலைத் கடுமையாக தாக்கிய லெஸ்லி புயல்! மின்சார துண்டிப்பால் 3 லட்சம் பேர் அவதி

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

போர்த்துக்கலை லெஸ்லி புயல் கடுமையாக தாக்கியுள்ளதால், வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சனிக்கிழமை ஐரோப்பிய நாடான போர்த்துக்கலை லெஸ்லி புயல் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் நாட்டின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

மேலும், பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 3 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.

பெருவெள்ளத்தினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளதாகவும், நாட்டின் பல சாலைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, பொதுமக்கள் பலர் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால், மருத்துவமனைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் லிஸ்பான், லைய்ரியா, கோய்ம்ரா, போர்டோ ஆகிய பகுதிகள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

எனினும், மீட்புப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reuters

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்