நீரில் மூழ்கி இறந்ததாக ஏமாற்றிய கணவன்: மனைவி குழந்தைகளுக்கு ஏற்பட்ட கதி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கடன் தொல்லையால் அவதிப்பட்ட சீனாவைச் சேர்ந்த ஒருவர் தான் இறந்து விட்டதாக ஏமாற்ற நினைத்து செய்த செயல் அவரது குடும்பத்தையே பலி வாங்கியுள்ளது.

சீனாவின் Xinhua பகுதியைச் சேர்ந்த ஹீ என்னும் நபர் வலிப்பு நோயால் அவதிப்பட்ட தனது மகளின் மருத்துவ செலவுக்காக ஏராளமாக கடன் வாங்கியிருக்கிறார்.

கடன் தொல்லையில் இருந்து தப்ப திட்டமிட்ட ஹீ, பெரிய தொகை ஒன்றிற்கு காப்பீடு எடுத்தார்.

பின்னர் கார் ஒன்றை இரவல் வாங்கிய அவர், தனது கார் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதுபோல் ஏமாற்றி, காரை நதி ஒன்றிற்குள் மூழ்கடித்து விட்டு தப்பி வந்து விட்டார்.

அவர் காப்பீடு செய்ததோ, இறந்ததாக ஏமாற்ற திட்டமிட்டதோ, ஹீயின் மனைவிக்கு தெரியாது.

கணவன் இறந்து விட்டதாக எண்ணிய ஹீயின் மனைவி தனது பிள்ளைகளுடன் குளம் ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஹீயின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோரின் உடல்கள் பின்னர் பொலிசாரால் மீட்கப்பட்டன.

ஹீயின் மனைவி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றில் நான்கு பேரும் எப்போதும் சேர்ந்து வாழ்வதையே தான் விரும்பியதாகவும், அவர் இல்லாததால் அவருடன் சேர்ந்து கொள்வதற்காக செல்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனைவியும் குழந்தைகளும் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ஹீ, யாருக்காக இந்த நாடகத்தை அரங்கேற்றினாரோ, அவர்களே இறந்துவிட்டதால், நொந்துபோய் Xinhua பகுதி பொலிசாரிடம் சரணடைந்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்