எதிர்பாராத நிலையில் நடுக்கடலில் மிதந்த குடிசையில் 50 நாட்கள் வசித்த இளைஞனின் திக் திக நிமிடங்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய நாடுகள்

ஒரு வாரத்திற்கு மாத்திரமே போதுமன உணவு காணப்பட்டுள்ள நிலையில் 49 நாட்கள் நடுக் கடலில் வசித்து சாதனை படைத்துள்ளார் இந்தோனேசியா இளைஞர் ஒருவர்.

மீன்பிடிப்பதற்கென அமைக்கப்பட்டிருந்த சிறுகுடில் தனது ஆதாரங்களிலிருந்து விலகி கடலினுள் கிட்டத்தட்ட 1,200 மைல்கள் சென்றுள்ளதால் நடந்த துயர சம்பவவே இது.

குறித்த இளைஞன் அப்பகுதியால் சென்ற சரக்குக் கப்பலின் உதவியுடன் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இளைஞன், தான் மிகப் பயத்துடன் இருந்ததாககவும், குடிலானது அலையில் ஆட்டங்கண்ட போதெல்லாம் தான் பீறிட்டு அழுததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் மீட்கப்படும் வரையில் 10 கப்பல்கள் தன்னைக் கடந்து சென்றதாகவும், ஆனால் அவர்கள் தன்னை அவதானித்திருக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

18 - 19 வயது மதிக்கத்தக்க "அடிலாங்" என்ற இளையனே மேற்படி துயரநிலைக்கு ஆளாகிய இந்தோனேசிய இளைஞனாவான்.

இளைஞன் மாட்டிக்கொண்ட குடிசையானது இந்தோனேசிய கடற்கரையிலிருந்து 80 மைல் தொலைவில் கடலினுள் அமைக்கப்பட்டிருந்த மீன்பிடிக் குடிசை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...