திடீரென வெடித்த டயரால் தாயின் கைகளிலிருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை: அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வெடித்த கார் டயரால், தாயின் கையில் இருந்த குழந்தை அந்தரத்தில் தூக்கி வீசப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஹூபே மாகாணத்தில் Danjiangkou பகுதி அருகே சாலையில் செயல்பட்டு வரும் கார் பழுது பார்க்கும் கடையில், வேலையாட்கள் சிலர் டயரில் முழுவதுமாக காற்றினை ஏற்றி வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

அதை அறிந்திடாத ஒரு தாய், கையில் குழந்தையுடன் சாலையை கடப்பதற்காக அப்பகுதியில் வந்து நின்று கொண்டிருந்தார்.

அந்த பெண் குழந்தையுடன் சாலையை கடக்க முயன்ற போது, காற்று ஏற்றிவைக்க பட்ட அந்த டயர் வெடித்து சிதறியது. இதில் அந்த பெண்ணின் முகத்தில் டயர் வேகமாக அடித்ததுடன், கையில் இருந்த குழந்தை 3 அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்டது.

உடனே அங்கிருந்த ஊழியர்கள் இருவரையும் மீட்டு அப்புறப்படுத்தினர்.

இந்த வீடியோ காட்சி கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், சம்பவத்தில் குழந்தைக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. தாயின் முகத்தில் லேசான காயங்களுடன் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. சம்பவம் கடந்த அக்டோபர் 12-ம் தேதி நடந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...