உலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலைக்கு தூண்டிய ஒரு ஸ்கைப் கால்: சிக்கிய முக்கிய குற்றவாளி!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையை திட்டமிட்டு செயல்படுத்தியவர் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஸ்கைப் கால் மூலம் இந்த கொலையை முடித்திருப்பது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகளின் நிர்பந்தங்களுக்கு பயந்து சவுதி அரசாங்கம் இந்த கொலையை செய்ததை ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எல்லாமுமாக செயல்படும் சாத் அல் கவ்தானி என்பவர்தான் இந்த கொலையை முன்னின்று நடத்தியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கடந்த செப்டம்பர் 28ம் திகதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு வந்துள்ளார்.

சவுதி அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை கட்டுரைகளாக வெளியிட்டு வந்த ஜமால் கசோக்கி,

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தின் உள்ளே 18 பேர் கொண்ட படையால் கொல்லப்பட்டார்.

கடந்த சில வருடங்களாக இவர் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார். இதற்காகவே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கொல்லப்பட்டதை சவுதி அரசும் ஒப்புக்கொண்டு இருக்கிறது.

சாத் அல் கவ்தானி, சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சமூக வலைதள பக்கத்தை இவர்தான் கவனித்து வருகிறார்.

அங்கு உள்ள சைபர் நெட்வொர்க்கிங் தலைவர் இவர்தான். இளவரசர் சல்மானிற்கு மிகவும் நெருக்கமானவர் இவர் என்று கூறப்படுகிறது. சல்மான் பாதுகாப்பிற்கு நிஜ உலகிலும், இணைய உலகிலும் இவர்தான் பொறுப்பு என்று கூறப்படுகிறது.

சவுதியில் அரசு குடும்பத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டது, லெபனான் பிரதமர் கைதானது, அமெரிக்காவிற்கு எதிராக தொடர்ச்சியாக நிறைய முடிவுகளை எடுப்பது, பல கார்ப்பரேட் முதலைகளை கைக்குள் வைத்து பிசினஸ் செய்வது என்று சல்மான் எடுத்த அனைத்து முடிவிற்கும் பின்னால் இருந்து உதவியது சாத் அல் கவ்தானிதான்.

சவுதியின் மிகவும் வலிமையான ''ஹிட் மேன்'' இவர் என்று அங்குள்ள அரசியல் பிரமுகர்களால் அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் ஜமாலின் கொலையை அரங்கேற்றியது இவர்தான் என்று கூறப்படுகிறது. ஜமால் கொலை செய்யப்பட போது, சாத் அல் கவ்தானி இஸ்தான்புல்லில் இல்லை.

ஆனால் ஒரு ஸ்கைப் கால் மூலம்தான் சவுதியில் இருந்து கொண்டே இந்த மொத்த திட்டத்தையும் இவர் வழிநடத்தி இருக்கிறார்.

ஸ்கைப் கால் மூலம் எப்படி கொலை செய்ய வேண்டும், உடலை என்ன செய்ய வேண்டும் என்று எல்லோரையும் வழி நடத்தி உள்ளார்.

ஆனால் இவர் ஸ்கைப் கால் செய்த விவரம் துருக்கி நாட்டிடம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக சல்மான் ஏற்கனவே சாத் அல் கவ்தானியை வேலையைவிட்டு நீக்கிவிட்டார். ஆனால், அதேசமயம் சாத் அல் கவ்தானி இன்னும் சல்மானின் மாளிகையில் அவருடன்தான் இருக்கிறார்.

வேலையைவிட்டு நீக்கியது வெறுமனே நாடகம். அவரை கைது எல்லாம் செய்ய மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளை அதிரவைத்த இந்த கொலையை அரங்கேற்றியது ஒரு சவுதி ஹிட் மேன் என்ற தகவல் சமூக ஆர்வலர்களை மிரள வைத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers