கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய மக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் உள்ளூர் நேரப்படி 1.58 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் சுமார் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அரை மனி நேர இடைவெளியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அது 7.0 ரிக்டர் அளவில் பதிவானதாகவும் தெரியவந்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

கிரீஸ் நாட்டில் இந்த அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers