உலக அழகி என அறிவிக்கப்பட்டவுடன் அதிர்ச்சியில் மேடையில் மயங்கி விழுந்த பெண்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

மியான்மர் நாட்டில் Miss Grand International 2018 என்ற உலக அழகிப் போட்டி நடந்தது.

இதன் இறுதிச் சுற்றில் பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸாவும் , இந்திய அழகி மீனாட்சி சவுத்ரியும் களத்தில் இருந்தனர்.

இருவரும் கைகோர்த்து நின்று கொண்டிருந்த போது கிளாரா சோஸா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பாளர் கூறியதைக் கேட்டு ஆனந்தத்திலும், அதிர்ச்சியிலும் கிளாரா மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

உலக அழகியாக வெற்றி பெற்ற கிளாரா அமெரிக்க அதிபரைச் சந்தித்து அமைதி மற்றும் சகிப்புத் தன்மைக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers