பர்தாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய முஸ்லிம் பெண்: பொலிசாரின் அதிர்ச்சி செயல்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஈரானில் பர்தாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பெண்ணை முட்டி தள்ளுவதை போல பொலிஸார் வாகனத்தை செலுத்தும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டின் தெஹ்ரான் தலைநகரத்தில் உள்ள பல்கலைகழக முஸ்லிம் மாணவி பர்தா அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

அப்பொழுது பொலிஸ் வாகனம் ஒன்று, போராட்டம் நடத்திய பெண்ணை மோதுவதை போல வேகமாக வாகனத்தை செலுத்தினர். இதை பார்த்த பெண்கள் அனைவரும் பதறிபோய் நின்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

இதுதொடர்பான வீடியோவினை இணையத்தில் பதிவிட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் திருமதி அலீனாஜி, இது உண்மையில் ஒரு வெட்கக்கேடான செயல் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவினை அவருக்கு அனுப்பியிருந்த பெண், எங்களுடைய பள்ளியில் 90 சதவிகித மாணவிகள் ஹைஜாப் அணிவதை விரும்பவில்லை. எங்களுடைய பிரச்சனை ஒரு துணியோ அல்லது முகத்தை மூடுவதோ அல்ல. துணியை வைத்து எங்களுடைய விதியை நீங்கள் தீர்மானிப்பது தான்.

இதுமூலமாக தான் எங்களுடைய தேசிய கலாச்சாரம் அறிமுகப்படுத்தபட வேண்டும் என்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்த துணியின் மூலம் எங்களை அடக்க பார்க்கிறீர்கள் என தெரிவிதுள்ளார்.

முன்னதாக 1979ம் புரட்சியிலிருந்து ஹைஜாப் அணிவது ஈரானில் கட்டாயமாக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்