இணையத்தை கலக்கும் திருமண வீடியோ: மணமகன் அப்படி என்ன செய்தார் தெரியுமா?

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பாதிரியார் மற்றும் மணமகளை, மணமகன் அவமானப்படுத்துவதை போன்ற வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட திருமண வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. டர்பன் பகுதியை சேர்ந்த லிண்டா மெத்வவா, தன்னுடைய காதலி டினியை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்தின் போது, பாதிரியார் கேட்கும் கேள்விகளுக்கு லிண்டா கொடுக்கும் பதில்கள், பாதிரியார் மற்றும் அவருடைய மனைவியை அவமானப்படுத்துவதை போல இருந்தது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து, பலரும் லிண்டாவிற்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் ஒரு சிலர், லிண்டா மனதில் எதையும் மறைத்து வைக்காமல் வெளிப்படையாக பேசுகிறார் என அவரை பாராட்டியுள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதால் அவருடைய மனைவி டினி கடும்கோபத்தில் இருப்பதாக லிண்டா தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில், திருமணத்திற்கு பிறகு எங்களுடைய வாழ்க்கை நன்றாக இல்லை என நீங்கள் நினைத்தால் அது தவறு.

என் பார்வையில் இருந்து பார்த்தால், எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. நான் என் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers