வடகொரியாவில் இவர்களின் ஆசைக்கு பெண்கள் இணங்கவேண்டும்! நானே சாட்சி என அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த பெண்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வடகொரியாவில் பெண்கள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாகவும், அதற்கு நானே சாட்சி என்று பெண் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

வடகொரியாவில் இருக்கும் மக்கள் அதிக அளவில் துன்புறுத்தலுக்குள்ளாவதாகவும், அங்கிருக்கும் பெண்களில் பெரும்பாலானோர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாவது வழக்கம்.

ஆனால் அந்த நாட்டில் இருக்கும் மக்களின் உண்மை நிலை என்ன என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில் வடகொரியாவில் இருக்கும் பெண்கள் நிலை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பு என்ற அமைப்பு விரிவான ஆய்வறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது.

இந்த ஆய்வு 54 பேரிடம் நடத்தப்பட்டது எனவும், நேர்காணல் மற்றும் அறிக்கைகள் போன்றவை சேகரிப்பதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது என குறிப்பிட்டுள்ளது.

அதில், வடகொரியாவில் பெண்கள் பொம்மைகள்போல் நடத்தப்படுவதாகவும் பாலியல் துன்புறுத்தல்கள், வன்கொடுமைகள் எல்லாம் சர்வசாதாரணம் எனத் தெரியவந்துள்ளது.

அரசு அதிகாரிகள், சிறைக் காவலர்கள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், இராணுவ வீரர்கள் ஆகியோரே இந்த செயலில் ஈடுபடுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, பொலிசார் ஒருவர் பெண்ணை அழைத்துச் சென்றால், அந்த பெண் அவரது ஆசைக்கு கட்டாயம் இணங்கியே ஆக வேண்டுமாம், அதைத் தவிர வேறு வழியே இல்லையாம்.

அதுமட்டுமின்றி பணம் கேட்டாலும் கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டுமாம்.

இதில் பாதிக்கப்பட்ட Oh jung என்ற பெண் கூறுகையில், பொலிசார் வந்து அழைப்பார்கள். அப்போது அவர்களை பின் தொடர்ந்து செல்ல வேண்டும்.

அவர்கள் மார்க்கெட்டில் இருக்கும் ஒரு காலி அறைக்கோ அல்லது வேறு பகுதிகளுக்கோ அழைத்து செல்வர். உங்களால் அப்போது ஒன்றுமே செய்ய முடியாது.

அவர்கள் பெண்களை ஒரு பொம்பை போன்று தான் பார்க்கின்றனர், வடகொரியாவில் அதிகாரமிக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் வாழவெ முடியாது. நீதியும் அங்கு எதிர்பார்க்க முடியாது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers