அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி! எச்சரிக்கை செய்தி

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு ஒரு வாரமாக தொடர்ந்து செல்போன் உபயோகித்ததால், கை விரல்கள் அசைக்க முடியாமல் செயலிழந்த சம்பவம் நடந்துள்ளது.

சீனாவின் Chungasaவைச் சேர்ந்த பெண் ஒருவர், அலுவலக வேலை காரணமாக இரவு தூங்கும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

எப்போதும் தனது நண்பர்களுடன் அவர் சாட்டிங் செய்துள்ளார். இவ்வாறாக தொடர்ந்து அவர் ஒரு வாரம் செல்போனை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் பணி முடிந்து விடுப்பு எடுத்து குறித்த பெண் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

சில மணிநேரத்திற்கு பிறகு அவரது கையில் வலியை உணர்ந்துள்ளார். அப்போது அவரது கை செல்போனை பிடித்திருந்த நிலையிலேயே மாறி செயலிழந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், பல மணிநேரத்திற்கு தொடர்ந்து ஒரே வேலையை செய்பவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படும் என்றும், இதன் பெயர் ‘டெனோசினோவிடிஸ்’ என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாதிப்புக்குள்ளான பெண் தற்போது குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்