10 வயது தங்கையின் குழந்தைக்கு அப்பாவான அண்ணன்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

கொலம்பியா நாட்டில் 10 வயது தங்கையின் குழந்தைக்கு அவரது அண்ணன் தந்தையாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Puerto Leguizamo நகரில் உள்ள மருத்துவமனையில் 10 வயது சிறுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டதில், ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தாய் மற்றும் பிறந்த குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். இந்நிலையில், வயது குறைந்த சிறுமி குழந்தை பெற்றெடுத்த காரணத்தால் மருத்துவமனையில் இருந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு வந்த பொலிசார் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது பெற்றோருடன் வசித்து வந்த சிறுமியை அவரது அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

ஆனால், இந்த விவரம் அறிந்தும் அச்சிறுமியின் குடும்பத்தார் இதுகுறித்து புகார் தெரிவிக்க முன்வரவில்லை. இதனால் பொலிசார் அண்ணனை கைது செய்து, குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers