விமானத்தில் கழிவறையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்ட பயணி: கால்களில் ஒட்டிய கழிவுகள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

Delta விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் சுமார் 2 மணிநேரம் கழிவறையில் அமர்ந்து பயணம் செய்த வற்புறுத்தப்பட்டதால், அவரது காலணிகள் மற்றும் கால்களில் கழிவுகள் ஒட்டியதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

Matthew Meehan என்ற நபர் விமான நேரத்தை தவறவிட்ட காரணத்தால் அடுத்த விமானத்தில் பயணம் செய்ய முற்பட்டார்.

அமெரிக்காவின் Atlanta வில் இருந்து Miami - க்கு பயணம் செய்த Matthew Meehan தனது இரண்டு மணிநேரம் பயணம் முழுவதும் கழிவறையில் அமர்ந்து பயணம் செய்ய கட்டாயப்படுத்துள்ளார்.

இதனால் அவரது காலணி மற்றும் கால்களில் மலம் ஒட்டியுள்ளது. விமானம் தரையிறங்கியவுடன் தனது காலணியை புகைப்படம் எடுத்துள்ளார். இதனை தனது பேஸ்புக்கில் பதிவிட்டு, எனக்கு நேர்ந்த இந்த அநியாயம் குறித்த யாரும் கண்டுகொள்ளவில்லை.

விமானம் புறப்படுவதற்கு முன்னர் அதனை சுத்தம் செய்யவில்லை. என்னை சோதனை செய்தவர்கள் கூட இதுகுறித்து எதுவும் கேள்வி எழுப்பவில்லை. இப்படி ஒரு பயணத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு வைரலானதையடுத்து, Delta மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல் பயணச்சீட்டு தொகையை திருப்பி தருவதாக கூறியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்