தவறு செய்த மாணவர்களுக்கு ஆசியர் கொடுத்த வினோத தண்டனை: வைரலாகும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்க நினைத்த ஆசிரியர் கட்டாயப்படுத்தி அவர்களை சிகெரெட் பிடிக்க வைத்துள்ள வீடியோ காட்சி இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் சுகபூமி பகுதியில் செயல்பட்டு பள்ளி ஒன்றில், 8-ம் வகுப்பு படிக்கும் 11 மாணவர்கள் பள்ளி நேரத்தில் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து சிகரெட் பிடித்து கொண்டிருந்துள்ளனர்.

இதனை பார்த்து கோபமடைந்த தலைமையாசிரியர் அவர்கள் அனைவரையும் தன்னுடைய அறைக்கு அழைத்தார். புகார் கடிதம் எழுதி பெற்றோரை வரவழைப்பார் என நினைத்து கொண்டு மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

ஆனால் கையில் சிகரெட் பாக்கெட்டுடன் வந்த தலைமையாசிரியர், அனைவருக்கும் ஒரு சிகரெட்டை கொடுத்து பிடிக்குமாறு கூறி வற்புறுத்தியுள்ளார்.

அதனை பிடிக்கும் மாணவர்கள் இனிமேல் திருந்திவிடுவார்கள் என நினைத்து தான் தலைமையாசிரியர் கொடுத்துள்ளார். ஆனால் அதை பார்த்து மாணவர்கள் அனைவரும் சிரிக்க, தண்டனைக்குள்ளான சிறுவர்களும் ரசித்து புகைப்பிடிக்க ஆரம்பிக்கின்றனர்.

இதனை வீடியோவாக எடுத்த சக ஆசிரியர் ஒருவர் இணையதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, சிறுவர்களின் பெற்றோர் அனைவரும் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.>

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகள் பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமையாசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்