ஆபத்தான நிலையில் நான்காவது மாடியின் பால்கனியில் விளையாடும் குழந்தை: திடுக் வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பாதுகாப்பில்லாத ஒரு பால்கனியில் ஆபத்தான நிலையில் ஒரு குழந்தை அமர்ந்து விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை திடுக்கிடச் செய்கிறது.

சிலியில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றின் நான்காவது மாடியில் சுற்றுச் சுவரோ, பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட எந்த அமைப்புகளோ இல்லாத ஒரு பால்கனியில் ஒரு குழந்தை உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

சற்று தவறினாலும் கீழே விழுந்து விடும் அபாயத்தை உணராத அந்த குழந்தை தனது பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதைக் காணும்போதே திகில் ஏற்படுகிறது.

அந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த மருத்துவமனையில் இருந்த ஒரு மருத்துவர் இந்த சம்பவத்தைக் கண்டதும் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்தார்.

ஆனால் பொலிசார் வருவதற்குள் அந்த குழந்தை அருகிலிருந்த ஜன்னல் வழியாக ஊர்ந்து கட்டிடத்தின் உள்ளே போய் விட்டது.

மருத்துவமனையிலிருந்து நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அந்த குழந்தையின் தாய் வீட்டிற்குள்தான் இருந்ததாகவும், அவர் போனில் பேசிக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

அந்த பெண்மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers