ஒளிந்து பிடிக்கும் விளையாட்டின்போது வாசிங்மெஷினில் சிக்கிய சிறுவன்: பரிதாபமாக பலியான சோகம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

போலந்து நாட்டில் சகோதரியுடன் ஒளிந்து பிடிக்கும் விளையாட்டின்போது வாஷிங்மெஷினில் சிக்கிய சிறுவன் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலந்து நாட்டில் 3 வயது சிறுவனான மார்செல் தன்னுடைய சகோதரியுடன் சேர்ந்து ஒளிந்து பிடிக்கும் விளையாட்டினை விளையாடி கொண்டிருந்துள்ளான்.

அப்போது திடீரென சிறுவன் மயமாகியிருக்கிறான். உடனே உறங்கிக்கொண்டிருந்த தன்னுடைய பெற்றோரை எழுப்பிய சிறுமி, மார்செல் மாயமாகிவிட்டதாக கூறியுள்ளார்.

பெற்றோரும் வீடு மற்றும் சுற்று பகுதிகளில் சிறுவனை தேடி பார்த்துள்ளனர். அப்போது சிறுவன் வாசிங்மெஷினில் சிக்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள், ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவனை வெளியில் மீட்டு முதலுதவி சிகிச்சை கொடுத்தனர். மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட அந்த சிறுவன் 6 மணிநேர போராட்டதிற்கு பின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் வழங்கினை விசாரித்த நீதிபதி, சிறுவன் பலியான விவகாரத்தில் யாருக்கும் சம்மந்தமில்லை என கூறி வழக்கினை முடித்து வைத்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers