சிறுநீரை குடிக்கவைத்து.... கரப்பான் பூச்சியை உயிருடன் சாப்பிட்ட அவலம்: ஊழியர்களை கொடூரமாக தண்டித்த நிறுவனம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சீனாவின் குயீஸோஹு மாகாணத்தில் செயல்படும் தனியார் நிறுவனம் தனது ஊழியர்களை மிகவும் கொடூரமாக துன்புறுத்தியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உள்புற அலங்கார பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சரியான முறையில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதற்கு தண்டனை வழங்கப்படுகிறது.

குறிப்பிட்ட நேரத்துக்குள் பணிகளை செய்து முடிக்காத ஊழியர்ளை சிறுநீரை குடிக்கச் செய்வது, கழிவறை தண்ணீரை குடிக்க வைப்பது, கரப்பான் பூச்சிகளை உயிருடன் சாப்பிட வைப்பது போன்ற தண்டனைகள் இந்த நிறுவனத்தில் சகஜமாக வழங்கப்பட்டுள்ளது. அதுவும் மற்ற ஊழியர்கள் கண் முன்பு இந்த தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடுமையான தண்டனைகளால் பணியில் இருந்து விலகிய சில ஊழியர்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை மொபைல் போனில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.

நிறுவனத்தின் ஊழியர்களை கொடூரமாக நடத்திய மூன்று மேலாளர்களை கைது செய்தனர். சக தொழிலாளர்களிடம் மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டதற்காக அவர்களுக்கு 10 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers