கர்ப்பிணிகள், இளம்பெண்களும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரை: மன்னிப்பு கோரிய ராணுவ தளபதி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அரசுக்கு எதிராக கிளர்ந்த போராட்டத்தை அடக்க 38 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாக தென் கொரியா மன்னிப்பு கோரியுள்ளது.

குறித்த சம்பவத்திற்காக உலக மக்களிடம் பொதுமன்னிப்பு கோருவதாக ராணுவ தளபதி Chun Doo-hwan பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உலக மக்களின் மனசாட்சியை உலுக்கிய இச்சம்பவத்தில் தென் கொரியாவின் உள்விவகாரத்துறை அமைச்சகமே மன்னிப்பு கோரியுள்ளது.

தங்களுக்கு நேர்ந்த துயரங்களை பகிர்ந்துகொள்ளவே துணிவற்ற ஆயிரக்கணக்கானோருக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாகவும் ராணுவ தளபதி Chun Doo-hwan அறிவித்தார்.

1980 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் ஜனநாயகவாதிகள் முன்னெடுத்த போராட்டத்தை ஒடுக்க அரசால் களமிறக்கப்பட்ட ராணுவத்தினர் நூற்றுக்கணக்கான யுவதிகளையும் இளம்பெண்களையும் கொடூர பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கினர்.

குடியிருப்புக்குள் நுழைந்து கர்ப்பிணிகளையும் பலாத்காரம் செய்துள்ளனர். தென் நகரமான Gwangju-ல் இளைஞர்கள் பலர் ராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானது மட்டுமின்றி சித்திரவதை செய்தும் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் மாயமானவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் என அரசு வெளியிட்ட கணக்கு 200 என்றாலும் சம்பவ பகுதியில் இருந்த சர்வதேச ஊடகங்களின் கணக்கு ஆயிரக்கணக்கானோர் என பதிவாகியுள்ளது.

போராட்டத்தை ஒடுக்க ராணுவம் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம், துஸ்பிரயோகம் என கண்மூடித்தனமாக நடந்துகொண்டது.

ஆனால் இச்சம்பவம் தொடர்பில் எவரும் புகார் அளிக்க முன்வராததால் கடந்த 38 ஆண்டுகளாக அரசாங்கத்தால் மூடியே வைக்கப்பட்டு வந்தது.

தேர்தல் நெருங்கிய நிலையில் இச்சம்பவம் தற்போது வெளிக்கொணரப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட Kim Sun-ok என்பவர் செய்தி ஊடகம் ஒன்றின் பேட்டியின்போது ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ராணுவத்துக்கு எதிராக 17 பாலியல் பலாத்கார வழக்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers