வயதை குறைக்க நீதிமன்றத்தை நாடிய முதியவர்: வியக்க வைக்கும் காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நெதர்லாந்தில் 69 வயது முதியவர் ஒருவர் தமது வயதை குறைத்து ஆவணம் வழங்க வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

நெதர்லாந்து நாட்டவரான Emile Ratelband என்பவர் தமது வயதை 49 என குறைத்து ஆவணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பெயர், பாலினம் என பலரும் தங்களது வசதிக்காக மாற்றிவரும் நிலையில் முதியவர் Emile Ratelband தமது வயதை குறைத்துக் கொள்வதற்கு போதிய காரணங்களையும் முன்வைத்துள்ளார்.

டிண்டர் உள்ளிட்ட ஜோடிகளை தேடிக்கொள்ளும் செயலிகளில் ஆர்வமாக செயல்பட்டுவரும் அவர், தமது வயது 49 என்றே பரவலாக அறியப்படுவதாகவும்,

அதையே ஆவணமாக பதிவு செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பாலினத்தை மாற்றிக் கொள்வது போன்று தமக்கும் அந்த வாய்ப்பை அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

உள்ளூர் நிர்வாகத்தினரிடம் முதலில் தமது வயதை குறைத்து ஆவணம் பதிவு செய்ய கோரியுள்ளார்.

ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார். மேலும் தமது சட்டப்பூர்வமான வயது வேலை வாய்ப்புகளை பறித்து வருவதாகவும், மருத்துவர்களே தமக்கு 45 வயதுடையோரின் உடல் அமைப்பே இருப்பதாக கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி தமது வயதை திருத்தி பதிவு செய்தால் தாம் பெற்றுவரும் 1,200 யூரோ மாத ஓய்வூதியத்தை விட்டுத்தரவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers