மருமகளை உயிருடன் புதைத்து கான்கிரீட்டால் மூடிய தம்பதி: நடுங்க வைக்கும் காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சொந்த பேரப்பிள்ளைகளை தங்களுடனே வளர்ப்பதற்காக மருமகளை உயிருடன் புதைத்து தம்பதி ஒன்று கான்கிரீட்டால் மூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் சாவ் பாலோ நகரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

குறித்த இளம்பெண் மார்சியா மிராண்டாவின் சடலமானது அவர்களது வாடகை குடியிருப்பில் புதிதாக கட்டிய உள் முற்றத்தில் 2 மீற்றர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 2 ஆம் திகதி முதல் மிராண்டா மாயமானதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தமது இரு பிள்ளைகள் பேரில் வங்கிக் கணக்கு ஒன்றை துவங்கும் நோக்கில் தமது மாமியார் மற்றும் மாமனாரை சந்திக்க முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் புதிதாக தாங்கள் வாங்கிய குடியிருப்பு மற்றும் நிலத்தை பார்வையிட மிராண்டாவை அவர்கள் நிர்பந்தித்து அழைத்துள்ளனர்.

அவர் கொண்டுவந்த காரில் மிராண்டாவுடன் சாவ் பாலோ நகரில் உள்ள அந்த குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.

ஆனால், மிராண்டாவை கொலை செய்து புதைப்பதற்கு என்றே அந்த குடியிருப்பு மற்றும் நிலத்தை அவர்கள் வாடகைக்கு எடுத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

குறித்த பகுதியில் இருந்து மிராண்டாவின் உடலை கைப்பற்றும்போது அது மிகவும் மோசமான நிலையில் உருக்குலைந்து இருந்தது.

மிராண்டாவின் விரல் அடையாளங்களே அவரை அடையாளம் காட்டியுள்ளது.

கணவரை பிரிந்திருந்த மார்சியா மிராண்டாவின் இரு பிள்ளைகள் மீதும் தற்போது கைது செய்யப்பட்ட மரியா ஐசில்டா(60) மற்றும் பெர்னாண்டோ டி ஒலிவேரா(62) ஆகிய இருவருக்கும் ஆசை இருந்து வந்துள்ளது.

அவர்களை தங்களது சொந்த பிள்ளைகளாக வளர்த்தவே முதியவர்களான அந்த தம்பதி திட்டமிட்டுள்ளது.

மட்டுமின்றி பிள்ளைகளிடம் தாய், தந்தை என்றே அழைக்கவும் அந்த தம்பதி அறிவுறுத்தி வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers