வீறிட்டு அழுத குழந்தை... விமானப் பணிப்பெண் எடுத்த முடிவு: பாராட்டை அள்ளிய சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்நாட்டு விமான சேவை ஒன்றில் விமானப் பணிப்பெண் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டிய சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

24 வயதான பாட்ரிசியா ஆர்கனோ என்ற விமானப் பணிப்பெண் உள்நாட்டு விமான சேவை ஒன்றில் அதிகாலை பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது பச்சிளம் குழந்தை ஒன்று வாய்விட்டு அலறுவதை கேட்டுள்ளார். பல நிமிடம் பொறுமை காத்து வந்த பாட்ரிசியா, ஒரு கட்டத்தில் அந்த குழந்தையின் தாயாரிடம் நேரிடையாக சென்று வினவியுள்ளார்.

குழந்தைக்காக எடுத்துவந்த சிறப்பு பால் காலியானதாகவும், அதனாலையே குழந்தை வீறிட்டு அழுவதாகவும் குறித்த தாயார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இளம் தாயாரான பாட்ரிசியா, குழந்தைக்கு தாய்ப்பாலூட்டலாமா என அனுமதி கோரியுள்ளார்.

அவரது ஒப்புதலுடன், பறக்கும் விமானத்தின் ஒரு அறைக்கு சென்று அந்த குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியுள்ளார்.

9 மாத குழந்தை ஒன்றிற்கு தாயாரான பட்ரிசியா இது குறித்து தெரிவிக்கயில், தானும் ஒரு தாயார் என்பதால் தாய்மார்களின் பிரச்னை என்னவென்று தெரியும் என்றார்.

நள்ளிரவு பயணம் என்பதால் குழந்தைக்கு போதுமான சிறப்பு பால் கருத முடியாமல் போனதாகவும், இக்கட்டான நேரத்தில் செய்த உதவிக்கு நன்றி எனவும் பட்ரிசியாவிடம் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers