70-க்கும் மேற்பட்ட இளைஞர்களை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு இருந்த கொடிய நோய்! பொலிசார் சொன்ன அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர் 70-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்தவர் Jakkrit Khomsing(43). இராணுவ வீரரான இவர் பேஸ்புக் மற்றும் Gay dating ஆப்பில் போலியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, இளைஞர்களிடம் பேசி வந்துள்ளார்.

அதன் பின் அவர்களுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பி, குறித்த இளைஞர்களிடம் நேரில் சந்தித்து தனியாக பேசியும் உள்ளார்.

அப்போது அந்த இளைஞர்கள் பேஸ்புக்கில் இருப்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருப்பதால், அவரிடம் பேசுவதை மறுத்துள்ளனர்.

ஆனால் இவரோ அவர்களை மிரட்டி, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதையடுத்து இவரை கைது செய்த பொலிசார். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் Jakkrit Khomsing-க்கு எச்.ஐ.வி அதாவது எய்ட்ஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளது.

இவரால் 70-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், இவர் மீது 6-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers