126 பயணிகளுடன் கம்பியை உடைத்துக்கொண்டு தாறுமாறாக தரையிறங்கிய விமானம்: நடந்த சம்பவம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

விமானத்தில் கோளாறு ஏற்பட்ட காரணமான விமானம் தாறுமாறாக தரையிறங்கியதால் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான குயானா தலைநகரான ஜார்ஜ்டவுனில் இருந்து ஏர் ஜமைக்கா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ஜெட் ரக விமானம் 126 பயணிகளுடன் கனடா நாட்டில் உள்ள டொரான்ட்டோ நகரை நோக்கி இன்று புறப்பட்டு சென்றது.

வானில் உயரக் கிளம்பிய சில நிமிடத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் அவசரமாக தரையிறங்கியது.

இதைதொடர்ந்து ,கடுமையான அதிர்வுடன் தாறுமாறாக தரையிறங்கிய அந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று பக்கவாட்டில் இருந்த கம்பி வேலியை உடைத்துகொண்டு நின்றது. இந்த விபத்தில் விமானத்தின் இறக்கை உள்ளிட்ட சில பகுதிகள் சேதம் அடைந்தன.

இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers