தென் ஆப்பிரிக்காவை உலுக்கிய இளம்பெண் கொடூர கொலை வழக்கு: நீதிமன்றம் விதித்த கடும் தண்டனை

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்கவையே உலுக்கிய, இளம்பெண் கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் ஸ்டெலன்போஷ் பகுதியை சேர்ந்த நீதிபதி வில்லெம் கொர்னேலியஸ் மகள் ஹன்னா கொர்னேலியஸ் (21) கடந்த மே மாதம் தன்னுடைய நண்பர் மார்ஷ் உடன் காரில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் 4 பேரால் நூதனமான முறையில் கடத்தப்பட்டார்.

தலைமறைவான இடத்திற்கு அந்த பெண்ணை தூக்கிச்சென்ற கும்பல் வலுக்கட்டாயமாக மாணவியை கூட்டுதுஸ்ப்பிரயோகம் செய்துவிட்டு, பாறாங்கல்லை கொண்டு அடித்து, கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக படுகாயங்களுடன் தப்பி சென்ற ஹன்னாவின் நண்பர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிசிடிவிகளை ஆய்வு செய்து ஜெரால்டோ பார்ஸன்ஸ்(27), வெர்னான் விட்போய்(33), நஷ்வில்லி ஜூலியஸ்(29), மற்றும் ஈபேன் வான் நெபெர்ஸ்க்(28) ஆகிய நான்கு குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அன்று இரவு மேலும் இரு பெண்களை சூறையாடியிருப்பது தெரியவந்தது. தென் ஆப்பிரிக்கவையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஹன்னா கொலை மற்றும் அவருடைய நண்பர் தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பார்ஸன்ஸ் மற்றும் விட்போய் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்கு 25 ஆண்டுகளும், கொள்ளையடித்ததற்கு 15 ஆண்டுகளும், கடத்தியதற்கு 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வான் நெபெர்ஸ்கிற்கு, கொலை செய்ததற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கொள்ளையடித்ததற்கு 20 ஆண்டுகளும், கடத்தலில் ஈடுபட்டதற்கு 10 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை தொடர்ந்து 4வது நபர் ஜூலியஸிற்கு கொள்ளையில் ஈடுபட்டதற்கு 15 ஆண்டுகளும், கடத்தலில் ஈடுபட்டதற்கு 7 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்